ஜூலை மாத ஏகாதசி விரதத்தை எப்போது அனுசரிக்க வேண்டும், பூஜை முறை, நல்ல நேரம் மற்றும் அதன் விவரங்களைக் தெரிந்து கொள்ளுங்கள் !! - Seithipunal
Seithipunal


அதாவது ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசி தினங்கள் உள்ளன. அந்த தினங்களின் பெயர், முக்கியத்துவம், கதை போன்றவை வேறு வேறு. இவற்றில் ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 

இந்த முறை யோகினி ஏகாதசி விரதம் வருகின்ற ஜூலை மாததில் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் பல மங்களகரமான யோகங்களும் உருவாகும், இதன் காரணமாக இந்த விரதம் இன்னும் சிறப்பு பெற்றது. யோகினி ஏகாதசி திதி, பூஜை விதி, சுப யோகம் மற்றும் பிற விசேஷங்களின் சரியான தேதியை மேலும் அறியவும்.

வருகின்ற ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பக்ஷத் தினத்தின் ஏகாதசி திங்கள், வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி  திங்கட்கிழமை காலை சுமார் 10:26 மணி அளவில் தொடங்கும், அது மறுநாள் காலை 08:42 மணி வரை அதாவது செவ்வாய், வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த ஏகாதசி தினத்தின் சூரிய உதயம் முதல் திதி வரும் ஜூலை 2 ஆம் தேதி, இந்த நாளில் இந்த விரதம் அனுசரிக்கப்படும். மறுநாள் அதாவது ஜூலை 3 புதன்கிழமை அன்று விரதம் கடைப்பிடிக்கப்படும்.

வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமை சர்வார்த்தசித்தி, திரிபுஷ்கரம் என்ற இரண்டு சுப யோகங்கள் உள்ளன. இந்த சர்வார்த்தசித்தி யோகத்தில் செய்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும், திரிபுஷ்கர யோகத்தில் செய்யும் பரிகாரங்கள், வழிபாடுகள் போன்றவற்றின் பலன் மூன்று மடங்கு கிடைக்கும். 

மேலும் இந்த வழிபாட்டின் மங்களகரமான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள். காலை 09:10 முதல் 10:50 வரை மற்றும் காலை 10:50 முதல் மதியம் 12:31 வரை.  மதியம் 12:31 முதல் 02:11 மணி வரை மற்றும் மாலை 03:51 முதல் 05:32 வரை மங்களகரமான நேரம்.

வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலையில் எழுந்து முதலில் குளித்து முடித்துக் கொண்டு விரத எடுத்து கொண்டு, உங்கள் கையில் பன்னீர், அரிசி, பூ எடுத்து வழிபடவும். ஒரு மங்கள நேரத்தில், ஒரு சுத்தமான இடத்தில் ஒரு மர மேசையில் வெள்ளை துணியை விரித்து, விஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வைக்கவும்.

முதலில், தெய்வத்தின் சிலைக்கு குங்குமத்தால் போட்டு வைத்து, மலர் மாலை அணிவித்த உடன் ஒரு  தூய நெய் தீபம் ஏற்றவும். பிறகு, ரோஜா , குங்குமம், அரிசி, ரோலி போன்றவற்றை ஒவ்வொன்றாக பிரசாதமாக வழங்கவும். வழிபடும் போது ஓம் நமோ பகவதே வாசுதேவாய நம என்ற மந்திரத்தையும் தொடந்து உச்சரிக்க வேண்டும்.

பூஜையை முடித்த பிறகு, விருப்பப்படி விஷ்ணு பகவானுக்கு பழங்கள் அல்லது இனிப்புகளை வழங்குங்கள், அதில் கண்டிப்பாக அதில் துளசி இலைகளை சேர்க்கவும். மறுநாள் துவாதசி திதியில் அதாவது வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி , புதன்கிழமை, பகவானுக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு விரதத்தை கை விடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

know the fasting day of ekadhasi in June month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->