புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் ..கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!
Liquor shops should be closed on Good Friday Christian Peoples Association
இந்த ஆண்டு வருகின்ற 18ஆம் தேதி புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதை நினைவு கூரும் விதமாக, கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும், தவக்காலத்தை கடை பிடித்து வருகின்றனர்.சாம்பல் புதனன்று துவங்கும் இந்த தவக்காலம், யேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறுடன் முடிவடைகிறது. தவக்காலம் முடிவடையும் கடைசி வாரம் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.இந்த புனித வெள்ளி முடிந்து மூன்றாவது நாள் ஈஸ்ட ர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு சா. மு. நாசர் அவர்களை சந்தித்து வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று கோரிக்கை மனு கொடுத்தோம் என தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்களிடம் உறுதியளித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தோம், சமூக சேவகர் டாக்டர் தா அரசன் தாஸ் ‘மற்றும் திரு. சகாயம் திரு. சைமன் செல்வம் திரு ஜஸ்கர் கலந்து கொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்..
English Summary
Liquor shops should be closed on Good Friday Christian Peoples Association