இந்த வார்த்தைகளை எல்லாம் பேசினால், வீட்டில் வறுமை ஏற்படும்.. மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.! - Seithipunal
Seithipunal


நகை, பணம், செல்வம் அனைத்துமே மகாலட்சுமியின் உருவமாக கருதப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டும் என்றால் கடினமான உழைப்பு தேவை. 

ஆனால், என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் சிலரிடம் பணம் நகை செல்வங்கள் சேர்வதே கிடையாது. அதற்கு காரணம் ஆன்மீகம் என்று கூறப்படுகிறது. அப்படி பணம் நம்மிடம் தங்காமல் போக காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 

மகாலட்சுமி தனக்கு பிடித்த இடத்தில் மட்டுமே நிலையாக நிற்பாள். அப்படி நிலை இல்லாத அவளது அருளைப் பெற வேண்டுமென்றால் நாம் மிகுந்த புண்ணியம் செய்ய வேண்டும். ஒரு நபர் தகாத வார்த்தைகளை பேசும் பழக்கம் கொண்டிருந்தால் அவரிடம் காசு பணம் என்பதே இருக்காது.

பணம் செலவாகிக் கொண்டே இருக்கும். எவ்வளவு வரவு வந்தாலும், அதிக செலவு ஏற்பட்டு அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும். அதுபோல ஒருவருக்கு அதிக நண்பர்கள் வட்டாரம் இருந்தால் அவர்களிடம் நிறைய மறைமுக எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அது ஆபத்தை கொடுக்கும். இப்படிப்பட்ட நபர்களிடம் பணம் தங்காது.

அதுபோல ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசினாலும், தாயை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகளை உபயோகித்தாலும் கூட நாம் பதிலுக்கு அப்படி பேசக்கூடாது. ஒருவேளை அவர்கள் திட்டுகிறார்கள் என்று நாம் பதிலுக்கு அப்படி திட்டினாலும் கூட நம்மிடம் மகாலட்சுமி தங்காது.

அதுபோல ஒரு நபரை சனியனே என்று திட்டுவது மிகப் பெரிய பாவச்செயல். சனிபகவானின் சாபத்திற்கு ஆளாகினால் நம்மிடம் பணம் நிற்காது. மூதேவி என்று ஒருவரை திட்டுவது தரித்திரமான செயல். இந்த தரித்துர செயலை செய்து கொண்டே இருந்தால் அவர்களிடம் பணம் தங்காது. 

பெற்ற குழந்தைகளை பார்த்து நீ உருப்படவே மாட்டானய் என்று பெற்றோர் சாபம் கொடுக்க கூடாது. ஐயையோ என்று அடிக்கடி கூறக்கூடாது. அச்சம் ஏற்படுத்தும் வகையில், அதிர்ச்சியான வார்த்தைகளை கூறி வீட்டில் சண்டை, சச்சரவு, சத்தம் என்று இருந்தாலும் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். எனவே, வீட்டில் பேசும் போதோ மற்றவர்களிடம் பேசும்போது நாம் கவனமாக இருந்தால் நம்முடன் மகாலட்சுமி எப்போதும் பயணிப்பார். வீடும் செல்வம் மிகுந்து காணப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahalakshmi arul Did Not Get These Type Of Peoples


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->