எந்த பிரச்சனைக்கு எந்த மகாலட்சுமி..? திருவுருவப் படம் குறித்த பல தகவல்கள்.!
Mahalakshmi photos of Different Type
மகாலட்சுமியின் திருவுருவப் படம்:
வாழ்க்கையில் கஷ்ட, நஷ்டங்கள் வந்து போவது என்பது இயற்கையான ஒரு விஷயம். அப்படி கஷ்ட, நஷ்டங்கள் வந்தால் அதை சமாளிக்கக்கூடிய திறன் நம்மில் சிலருக்கு மட்டுமே உள்ளது. அப்படி ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை சமாளிக்கக்கூடிய ஆற்றலை தருவது மகாலட்சுமியின் அருள் மட்டுமே!
இஷ்ட தெய்வத்தின் திருவுருவப் படம்... குலதெய்வத்தின் திருவுருவப் படம்... இவை எல்லாம் நம் வீட்டில் இருக்கின்றதோ... இல்லையோ கட்டாயமாக எல்லா வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப் படம் இருக்கும்.
உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு நிறைய கோபம் வருகிறதா? வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடப்பதற்கு தடையாக இருக்கிறதா? வீட்டில் கண் திருஷ்டியின் மூலம் பிரச்சனைகள் வருகிறதா? இப்படி வீட்டில் இருக்கும் மற்ற பிரச்சனைகளுக்கும் நல்லதொரு தீர்வை கொடுக்கக்கூடிய சக்தி மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு உண்டு.
வெள்ளை நிற மகாலட்சுமி :
உங்கள் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், சண்டைகள் எல்லாம் சமாதானமாக மாறி, அமைதியான மன நிலைமை உங்களுக்கும், உங்களுடைய வீட்டிலும் நிலவ வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலிருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய கோப குணமும் இந்த மகாலட்சுமியை பார்க்கும்போது படிப்படியாக குறையும்.
மஞ்சள் நிற மகாலட்சுமி :
மஞ்சள் நிறத்தில் அதாவது தங்க நிறத்தில் ஜொலிக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் கணவன், மனைவிக்குள் இருக்கக்கூடிய அன்யோன்யம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த மங்களகரமான காரியங்கள் நடக்க தொடங்கும்.
சிவப்பு நிற மகாலட்சுமி :
சிவப்பு நிற சேலையை உடுத்தி இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைக்கும்போது நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும். அக்கம்-பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள் வீட்டிற்குள் வந்து போனால் வீட்டில் பிரச்சனைகள் வருகிறது என்றால், சிறிய அளவில் ஒரு சிவப்பு நிற ஆடை உடுத்திய மகாலட்சுமியின் திருவுருவ படத்தை வரவேற்பறையில் வைத்துக்கொள்ளலாம்.
பச்சை நிற மகாலட்சுமி :
தாமரைப்பூவில் அமர்ந்து, பச்சை நிற வண்ணத்தில் ஆடை உடுத்திய மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும்போது, நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
English Summary
Mahalakshmi photos of Different Type