முருகனின் திருக்கல்யாணத்தில் வைக்கப்பட்ட தேங்காய் 3 லட்சத்திற்கு ஏலம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த 2-ந்தேதி கந்தசஷ்டி விழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் திரளான பக்தர்கள் முன்னிலையில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், போடி அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால சுப்பிரமணியன் கோவிலில் சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து திருக்கல்யாணம் இன்று விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. 

அதனை போடி ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கு வாங்கி சென்றார். ஏலத்தொகைய அறிந்து மெய் சிலிர்த்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். 6 ஆயிரத்தில் தொடங்கிய ஏலத்தொகை ரூ.3 லட்சத்தில் நிறைவு பெற்றது.

ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றதும் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காய் ஏலம் விடப்படுவைத்து வழக்கம். கடந்த ஆண்டு ரூ.65 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.3 லட்சம் வரை சென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murugan thirukalyanam coconut auctioned 3 lakhs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->