நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாடு.. யாரை வழிபட வேண்டும்.? என்னென்ன பலன்கள்.! - Seithipunal
Seithipunal


சௌபாக்கியம் அருளும் ஐந்தாம் நாளான வைஷ்ணவி பூஜை..!!

அம்மன் வடிவம் : வைஷ்ணவி.

பூஜையின் நோக்கம் : தூத சம்வாதம்.

வைஷ்ணவி வடிவம் : கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள்.

திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள்.

கருட வாகனம் கொண்டவள்.

தீய சக்திகளை அழிக்க வல்லவள்.

செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.

தென்நாட்டில் ஐந்தாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சபரி துர்க்கை.

அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்க வேட்டுவ உருவம் தரித்து சென்ற சிவபெருமானுடன் அவருக்கு துணைவியாக சென்ற அம்பிகையின் தோற்றம்.

சபரி என்றால் வேட்டுவக் குலப்பெண் என்று பொருள்.

வேட்டுவச்சியாக அம்பிகை தரித்த கோலமே சபரி துர்க்கை ஆகும்.

வனத்தில் வசித்து ஞானத்தை அருளக்கூடியவள்.

பாவங்களைப் போக்கி அருளை அளிக்கக்கூடியவள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : பாரிஜாதம்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : விபூதி பச்சை.

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : பச்சை நிறம்.

அன்னையின் அலங்காரம் : சுகாசனத்தில் காளி துர்க்கை அலங்காரம்.

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மல்லிகை மற்றும் முல்லை மலர்கள்.

கோலம் : கடலை மாவு கொண்டு பறவை கோலம் போட வேண்டும்.

நெய்வேத்தியம் : தயிர் சாதம்.

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 6 வயது.

குமாரி பூஜையினால் உண்டாகும் பலன்கள் : கவலைகள் அகலும்.

பாட வேண்டிய ராகம் : பந்துவராளி.

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : ஜல்லரி.

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : அப்பளம்.

பலன்கள் : சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navaratri 5thday pooja vaishnavi poojai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->