அடிக்கடி கோவிலுக்கு செல்பவரா நீங்கள்? அப்போ இதை தெரிந்துவிட்டு செல்லுங்கள்.! - Seithipunal
Seithipunal


புனித தலமாக கருதப்படும் கோவிலில் நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறும். இதனால், கோவில் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும். அதனால், நாம் கோவிலுக்குள் செல்லும் போது நம் எண்ணங்கள் சுத்தமாகவும், நல்ல சிந்தனையுடன் மனதை சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். 

பொதுவாக கோவிலுக்குள் நுழையும் முன்னர் கால்களை கழுவிவிட்டு தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு பின்னர் கோபுரத்தை வணங்கியே செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது கோயில் நுழைவாயிலின் முதல் படிகட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வது வழக்கம். 

இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா? "கோயில் நுழைவாயிலின் முதற்படி சற்று அகலமாதனதாகவே அமைக்கப்படும். இதனை தாண்டி தான் செல்ல வேண்டும். கோவிலில் நாள் முழுவதும் மந்திரங்கள் ஓதப்பட்டு, மங்களகரமான இசைகள் ஒலிக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களால் நிறைந்திருக்கும். 

இப்படிப்பட்ட புனிதமான இடத்திற்குள் செல்லும் போது நாம் தேவையற்ற சிந்தனைகளை சுமந்து செல்லக் கூடாது. அப்படி கோவில் படிகட்டில் கால் வைத்து உள்ளே செல்லும் போது எதிர்மறை எண்ணங்களை நாம் சுமந்து உள்ளே செல்வதாகவே அர்த்தம். இதனால், தான் படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது நமது எண்ணங்களில் மாற்றம் ஏற்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no walk in temple first step


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->