ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை.!
oothukattu ellaiyamman
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எல்லையம்மன் கோவிலில் கடந்த 22-ம் தேதி ஆடித்திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று அம்மனுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை மற்றும் வளையல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கோவில் முகப்பு முதல் அம்மன் கருவறை வரை ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதன் பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், திருவிழாவின் போது பூந்தமல்லி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.