கார்த்திகை தீபத் திருவிழா - திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்.! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா வருகின்ற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 6.30 முதல் இரவு 7.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளுகிறார். 

அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றதையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் தலையில் கிரீடம் சூடியும், திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சாற்றுப்படி செய்து பட்டாபிஷேகமும் கோலாகலமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 13-ந் தேதி மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. 

இந்த விழாவிற்காக 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட புதிய தாமிர கொப்பரை, 5 கிலோ கற்பூரம், 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியிலான திரி உள்ளிட்டவை தயார்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பெரிய மணி அடித்ததும் பால தீபம் ஏற்றப்படும். இதே நேரத்தில் கோவில் மணியின் ஓசை கேட்டதும் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pattabishegam in thiruparangundram murugan temple for karthigai deepam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->