பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா..கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோயிலான லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.

கொடி ஏற்றத்துக்கு பின்னர், அம்மனுக்கும் பெருமாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடி மரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது.

வருடா வருடம் நடைபெறும் லஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலின் சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அம்மன் சிம்ம வாகனம், அனுமன் வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் வீதி உலா நடைபெறும். வரும் ஏப்ரல் 21ம் தேதி அம்மனுக்கு திருகல்யாணமும் ஏப்ரல் 23ம் தேதி திருதேரோட்டமும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazhani lakshmi narayana temple flag up chithirai festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->