கோயில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை, நியமிக்க கூடாது! உயர்நீதிமன்ற தீப்புக்கு பின் கூனம்பட்டி ஆதினம் கருத்து! - Seithipunal
Seithipunal


அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பழமையான கோயில்களிலும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் யாரும் பணிபுரிய இயலாத சூழ்நிலை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் இவற்றிற்கெல்லாம் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்ப்பு குறித்து கூனம்பட்டி ஆதீனம் நடராஜன்தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், "மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையை பார்க்கும்போது இறைவனே உதவி செய்ததாக தோன்றுகிறது.

அவரவர் விருப்பப்பட்ட துறையில் பணிபுரிய அனைவருக்கும் இங்கு உரிமை இருக்கிறது. துறைகளை மாற்றி அறநிலைய துறையை சார்ந்தவர்களை மின்சார துறையிலும் மின்சார துறையை சார்ந்தவர்களை அறநிலைத்துறையிலும் பணியில் அமர்த்தினால் எப்படி வேலை சரியாக நடக்கும்.

அனைத்து துறை ஊழியர்களும் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தான் அந்த துறை செழிப்படையும். இப்படி இருக்க அறநிலையத்துறையை பொறுத்தவரை அரசியல் மற்றும் அதை சார்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொள்ள முயற்சி செய்வது அநாகரிகமாக தெரிகிறது.

கோவில் ஒரு புனிதமான இடம் ஆனால் தனியார் நிறுவனம் போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் துறை ஊழியர்கள் எப்படி மேலதிகாரிகளுக்கு பயப்படுகிறார்களோ அதே மாதிரி இந்த அறநிலைத்துறையிலும் இறைவனிடம் கூட பயம் இல்லை ஆனால் பூசாரிகளையும் சிவாச்சாரிகளையும் பார்க்கும்போது கோவில் நிர்வாகிகள் வேலையாட்கள் என அனைவரும் நடுங்குகிறார்கள் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று.

சிவாகம் என்று சொல்லப்படுவது இறைவனால் படைக்கப்பட்டது. இறைவனை வழிபடும் போது பக்தியுடனும் கருணையுடனும் இருக்க வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் சம்பந்தப்பட்டவர்களை முற்றிலுமாக தவிர்த்து ஆன்மீக விருப்பம் உள்ளவர்களே அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். 

மொத்தம் 28 ஆகமங்கள் உள்ளது அதன்படி தான் பூஜை நடக்க வேண்டும் இதில் அதிகாரிகள் யாரும் தலையிடக்கூடாது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி விட வேண்டும் என அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Politicians should not be appointed as trustees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->