திருப்பதியில் பவுர்ணமி கருட சேவை ரத்து - காரணம் என்ன?
povurnami karuda sevai cancelled in tirupathi temple
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"மே மாதம் 12-ந்தேதி, ஜூலை மாதம் 10-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி, நவம்பர் மாதம் 5-ந்தேதிகளில் நடைபெற இருக்கும் பவுர்ணமி கருடசேைவ ரத்து செய்யப்பட்டுள்ளன.
காரணம் ஜூன் மாதம் 11-ந்தேதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடப்பதாலும், செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் 4-ந்தேதி கார்த்திகை தீபம் நடப்பதாலும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
povurnami karuda sevai cancelled in tirupathi temple