எதிலும் துல்லிய தன்மை கொண்ட ராசிகர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.!  - Seithipunal
Seithipunal


ராகு கேது பெயர்ச்சி 2022-2023:

ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுவானவர் ஜென்ம ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

பலன்கள் :

திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் உழைப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். தனவரவுகள் சாதகமாக இருந்தாலும், எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.

பொருளாதாரம் :

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் பேராசை இன்றி செயல்படவும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் :

உடல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு :

கணவன்-மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களின் வகையில் ஆதரவும், அலைச்சலும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திறமைக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். பணி நிமிர்த்தமான அலைச்சல்களின் மூலம் உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

வியாபாரிகளுக்கு :

கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கேற்ப சிந்தித்து செயல்படவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அணுகுமுறைகளை உருவாக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கட்சி சார்ந்த உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு காலதாமதமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு :

உயர்நிலை சார்ந்த கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து அவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளவும். மனதில் தோன்றும் கருத்துக்களை பெற்றோரிடம் கலந்துரையாடி முடிவெடுக்கவும்.

நன்மைகள் :

நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் பிற மொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.

கவனம் :

மனதில் ஒருவிதமான சோர்வு மற்றும் பழைய நினைவுகளும் அதிகரிக்கும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர சிந்தனைகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragu kethu peyarachi for thulam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->