வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யலாமா.?! சிவலிங்கம் குறித்த அரிய தகவல்கள்.!
Sivalingam poojai at Home special
வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்யும் முறைகள்:
வீட்டின் பூஜையறையில் சிவனின் திருவுருவப் படத்தை பெரும்பாலானோர் வைத்திருப்போம். ஆனால் வெகு சிலர் மட்டுமே, சிவலிங்கத்தை முழுமையாக நிறுவியிருப்பார்கள்.
சிவனை இரண்டு விதமாக வழிபடலாம். அவற்றில் ஒன்று கோயிலுக்குச் சென்று வழிபடுவது. மற்றொன்று வீட்டிலேயே வணங்குவது ஆகும்.
கோயிலில் இருக்கும் சுவாமி, மருந்து வைத்து நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு அசரம் என்று பெயர்.
வீட்டில் இருக்கும் சுவாமியை எங்கேயும் எடுத்து கொண்டு போகலாம். இதற்கு சரம் என்று பெயர்.
அந்த வகையில் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து எவ்வாறு பூஜை செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடும் முறைகள் :
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். லிங்கத்தின் திருவுருவம் நம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக இருந்தால் நல்லது. அதாவது லிங்கத்தை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாது.

பதிவு செய்ய கிளிக் செய்யுங்கள்...!
சிவலிங்கத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின் ஒரு முறை கங்கை நீரிலும், குளிர்ந்த பாலிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க வேண்டும்.
மேலும் சிவலிங்கத்தின் அருகாமையில், தேவியின் விக்கிரகம் இருந்தால் கூடுதலான நன்மைகளை வழங்கும்.
தினமும் காலை, மாலை சிவலிங்கத்தின் சிரசின் மீது நீர் விழும் வகையிலான நீர் ஊற்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒருபோதும் மஞ்சளை குருமார்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி சிவலிங்கத்திற்கு அர்ப்பணிக்க வேண்டாம். இயல்பில் மஞ்சள் என்பது அம்பிகையின் அம்சம் ஆகும்.
குங்குமத்தையும் முறையான வழிகாட்டுதல் இன்றி அர்ப்பணிக்கக்கூடாது. குங்குமம் என்பது தங்களின் கணவன் மார்களின் ஆயுள் சிறப்புடன் அமைவதற்காக பெண்கள் தேவியை வழிபடும் ஒரு வழி.
சிவபெருமான் அழித்தலுக்கான கடவுள். எனவே காத்தலுக்காக வழிபடும் அம்சத்தை அழிக்கும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டாம்.

சிவலிங்கத்திற்கு தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டும். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். சூடான அல்லது வெதுவெதுப்பான பாலை அபிஷேகம் செய்யக்கூடாது.
தவறியும் சிவலிங்கத்திற்கு துளசி இலைகளை முறையான வழிகாட்டுதல் இன்றி அர்ப்பணிக்க வேண்டாம். ஈசனுக்கு உகந்த வில்வ இலையை அர்ப்பணிக்கவும்.
தேங்காயை ஈசனுக்கு சமர்பிக்கலாம். ஆனால் முறையான வழிகாட்டுதல் இன்றி தேங்காயின் நீரை நேரடியாக சிவலிங்கத்திற்கு சமர்பிக்க வேண்டாம்.
English Summary
Sivalingam poojai at Home special