தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம் : கிரகணம் எப்போது நிகழ்கிறது? எங்கெல்லாம் தெரியும்? - Seithipunal
Seithipunal


தீபாவளியும், சூரிய கிரகணமும்.!

27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு வரும் தீபாவளியன்றும் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமானது இந்த முறை முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு அடுத்த நாள் (அக்டோபர் 25, 2022) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

லட்சுமி பூஜை :

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசையன்று, தீபாவளி பண்டிகையன்று அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்வது விசேஷமானது.

இந்த ஆண்டு லட்சுமி பூஜைக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் ஏற்படுவதால், நள்ளிரவுக்குப் பிறகு சூதகம் தொடங்கும். சூரிய கிரகணத்தால் லட்சுமி பூஜையில் எந்த வித பாதிப்பும் இருக்காது.

சூரிய கிரகணம் என்பது என்ன?

பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வதை தான் சூரிய கிரகணம் என்கிறோம். 

வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற உள்ள சூரிய கிரகணமானது, பகுதி சூரிய கிரகணமாக (pயசவயைட ளழடயச நஉடipளந) தோன்றும் என்ற நிலையில், பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்பதால் ஒரு இடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிகிறது.

சூரிய கிரகணம் எப்போது நிகழும்?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நிகழ உள்ளது.

கிரகண ஆரம்ப காலம் : மாலை 05.14 மணி

கிரகண மத்திய காலம் : மாலை 05.42 மணி

கிரகண முடிவு காலம் : மாலை 06.10 மணி

கர்ப்ப ஸ்திரிகள் மாலை 05.00 மணி முதல் 06.30 வரை சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா?

இந்தியாவில் சில பகுதியில் மட்டும் கிரகணம் தெரியும். சில பகுதியில் ஆரம்பமும், மத்தியமும் தெரியும். ஆனால் கிரகண முடிவுகள் என்பது இந்தியாவில் தெரியாது.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் ஓரளவு தெரியும் என்பதால் பாதிப்பு இருக்காது.

சூரிய கிரகணம் தெரியும் நகரம் :

டெல்லி 

மும்பை 

மைசூர் 

பெங்க;ர் 

பாலக்காடு 

திருவனந்தபுரம்

ஈரோடு 

கோயம்புத்தூர் 

திருப்பூர்

திருநெல்வேலி 

ஊட்டி 

சூரிய கிரகணம் வேறு எங்கு தெரியும்?

இந்த கிரகணம் ஐரோப்பா, தெற்குஃமேற்கு ஆசியா, வடக்குஃகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிக் ஆகிய பகுதிகளில் தெரியும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Solar eclipse special


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->