மன பாரம் & மன அழுத்தத்தை குறைக்கும்.. ஸ்படிக ருத்ராட்ச மாலை.! - Seithipunal
Seithipunal


மன அமைதி தரும் ஸ்படிக ருத்ராட்ச மாலை:

ருத்ராட்சம் :

ருத்ராட்சம் உடலில் இருக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. இது பல நோய்களுக்கு எதிராக போராடுவதன் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தின்படி ருத்ராட்சம் நமது உடலின் மூலக்கூறுகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் உடல் உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கிறது.

ஸ்படிக மாலை :

ஸ்படிக மாலை அணிவதால் மனதில் உள்ள பாரம், மன அழுத்தம் குறைந்து உடலை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும். ஸ்படிக மாலை தெளிவான சிந்தனையை தரக்கூடியவை. தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதோடு உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்.

ஸ்படிக ருத்ராட்ச மாலை :

ருத்ராட்சம் மற்றும் ஸ்படிக ஜெபமாலை இரண்டும் ஆன்மிகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் சக்தி உடையது.

இந்த இரண்டையும் (ருத்ராட்சம் மற்றும் ஸ்படிகம்) சேர்த்து மாலையாக கோர்த்து அணிந்துள்ளவர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்களும், அச்சங்களும், கவலைகளும் நீங்கி மன அமைதி கிட்டும் என நம்பப்படுகிறது. உடல் சூட்டை சீரான அளவில் இருக்க வைக்கும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spadiga malai For mental Problems


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->