இரண்டு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் இஸ்ரோ; சாதனை படைக்கும் இந்தியா..? - Seithipunal
Seithipunal


விண்வெளியில் ஒருங்கிணைப்புக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையிலான தூரம் 230 மீ., ஆக குறைந்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

இதனையடுத்து குறித்த இரண்டு விண்கலன்கள் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதன் முன்னோட்டமாகவே, இரண்டு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

இதற்காக, கடந்த டிச.,30ம் தேதி , தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஜனவரி 07 இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் நிலைப்படுத்துதலில் ஒப்புதல் பெற முடியாத நிலையில், இரு விண்கலன்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மீண்டும் ஒத்தி வைப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. குறித்த விண்கலன்கள் நேற்று 1.5 கி.மீ., தூரத்தில் இருந்தன என்றும், இது இன்று காலை 500 மீ., ஆக குறைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இஸ்ரோ இன்று மாலை அறிக்கை வெளியிட்டது.'' அத்தில், இரண்டு விண்கலங்களும் 230 மீ., இடைவெளியில் உள்ளது. அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டது. விண்கலன்கள் நல்ல நிலையில் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு விண்கலன்களையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை பெற்ற 04வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India to create a record in space


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->