உங்கள் ராசிக்கு ஸ்பெஷல் கலர் இது தான்.! இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு போனா கண்டிப்பா சக்ஸஸ்.!
special color for zodiac
வண்ணங்களுக்கும் எண்ணங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. வண்ணங்களுக்கும் அதிஷ்டத்திற்கும் தொடர்பு உண்டு. எனவேதான் காலையில் ராசி பலன் சொல்லும் போதே ஒருவர் அன்றைக்கு அணியவேண்டிய ஆடைகளின் நிறத்தையும் கூறுகின்றனர்.
இது என்னோட லக்கி நிறம்,இந்த கலர் டிரஸ் போட்டுட்டு போனேன் எனக்கு லக் அடிச்சது. இன்டர்வியூவில் பாஸ் பண்ணிட்டேன். பரிட்சை சூப்பரா எழுதினேன் என்று கூறுவார்கள்.
எந்த கிழமைகளில் என்ன கலர் ஆடை அணியலாம்? எந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் அதிர்ஷடம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வண்ணங்களின் அதிர்ஷ்டம்
ஞாயிறு தொடங்கி சனி வரை கோள்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப ஆடை அணியவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட நிறமானது,அவர்களின் பிறந்த தேதியைப் பொறுத்து மாறும் என்றாலும், ஏழு நாட்களுக்கும் உரிய இந்த ஏழு நிறங்களும் அனைவரும் அணிவதற்கு ஏற்றது.
எந்த நாட்களில் என்ன கலர்
ஞாயிறன்று சிவப்பு , இளம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணியலாம். திங்கட்கிழமையன்று வெண்மை மற்றும் இளம் ஊதா நிறம் சுபம் தரும். செவ்வாய் கிழமைகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் அணியலாம்.
புதன்கிழமையில், பச்சை ஆடையும், வியாழக்கிழமை மஞ்சள் நிறமும் உகந்தது. வெள்ளி. கடல் நீலம், வெண்மை நிறம் அணியலாம். சனிக்கிழமை நீலம், கருப்பு நிற ஆடை அணியலாம்.
மேஷமும் சிவப்பு நிறமும்
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் தைரியம் மிக்கவர்கள். சூரியன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். இவர்களுக்கு இரத்தச் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்டர்வியூ, வேலை, ஏதாவது முக்கிய நபரை சந்திக்க செல்லும் போது சிவப்பு நிற ஆடை அணிந்து சென்றால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபமும் வெண்மையும்
ரிஷப இராசிகாரர்களுக்கு சுக்கிரன் ராசி அதிபதி. சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். வெண்மை, சில்வர் நிறம் உகந்தது. இந்த ராசிக்காரர்கள் இந்த நிறம் கொண்ட ஆடைகளை அணிந்து செல்வது அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த ஆண்டு வெளிர் நீல நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நிறமாகும்.
பச்சை நிறமே பச்சை நிறமே
மிதுனம் ராசியின் ஆட்சி கிரகம் புதன். புதனுக்கு உகந்த நிறம் பச்சை. இந்த ஆண்டு நீங்கள் பச்சை நிற ஆடை, பச்சை நிறம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வெற்றி தேடி வரும்.
நீலம், வெண்மை
சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. உங்களுக்கு வெண்மை, நீலம், கடல் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இந்த நிற ஆடைகளை அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம்.
பொன்நிறம் அதிர்ஷ்டம்
சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்நிறம் ஏற்றது. முக்கியமான நபர்களை சந்திக்க செல்லும் போது, முக்கியமான தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது பொன்நிற ஆடைகளை அணிந்து செல்லலாம்.
ஊதா, பச்சை, மஞ்சள்
கன்னி ராசிக்காரர்களின் ஆட்சி, உச்ச கிரகமாக புதன் திகழ்கிறார். அவருக்கு பிடித்தமானது பச்சை. புதன்கிழமை பச்சை ஆடை அணியலாம். பிற நாட்களில் இளம் ஊதா, இளம் மஞ்சள் அணியலாம்.
நீலநிறம் அதிர்ஷ்டம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஆட்சி கிரகம். வெள்ளிக்கிழமைகளில் கிரீம் நிற ஆடை அணியலாம். சனி உச்சம் பெற்ற வீடு என்பதால் பிற நாட்களில் நீல நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.
சிவப்பு – ஊதா – பச்சை
விருச்சிகம் செவ்வாய் பகவான் ஆட்சி வீடு. இந்த ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடையும், பிற நாட்களில் ஊதா, பச்சை நிற ஆடையும் அணியலாம். அதிர்ஷ்டம் தேடி வரும்
மஞ்சள் நிறம்
தனுசு குருபகவானின் ஆட்சி வீடு. இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணியலாம்.
கருநீலம் அதிர்ஷ்டம்
மகரராசியில் சனி பகவன் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். செவ்வாய் பகவான் உச்சம் பெறுகிறார். சாம்பல் நிறம், கருநீலம், நீல நிறம் ஆடைகள் அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.
ஊதா, கருநீலம்
கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக ஊதா நிறம் அணியலாம். சனிக்கிழமைகளில் கருநீல ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
வெண்மை, இளமஞ்சள்
மீனம் ராசியில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். சுக்கிரன் உச்சம் பெறுகிறார். வெண்மை, இளம் மஞ்சள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் நிறமாகும். இந்த நிற ஆடைகளை அணிவது கூடுதல் சிறப்பு.