புரட்டாசி முதல் சனி - பெருமாள்கோயில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்.! - Seithipunal
Seithipunal


பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாக உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். 

அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் எடுக்கும் மக்கள் தங்களது வீடுகளில் எந்த ஒரு அசைவமும் சமைக்காமல் தீவிரமாக வழிபடு செய்வார்கள்.

இந்த நிலையில், இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. இன்றைய தினம் பெருமாள் ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீரங்கம் உள்பட 108 திவ்யதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனையொட்டி கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடும் செய்து வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special pooja in tamilnadu perumal temples for purattasi saturday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->