திருப்பதி கோவிலில், இந்த மாதம் நடக்கவுள்ள விசேஷங்கள்- தேவஸ்தானம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள முக்கிய விழாக்கள் குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆண்டாள் திரு ஆடிபூர சாத்துமுறை நடைபெறுகிறது. புரசைவாரித்தோட்டத்திற்க்கு உற்சவர் மலையப்ப சாமி எழுந்தருளும் நிகழ்வு நடக்க உள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி கருட பஞ்சமி வருவதால் கருட சேவையும், 6-ம் தேதி தரிகொண்ட வேங்கமாம்பா பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுகிறது. 

மேலும், ஆகஸ்ட் 8-ல் இருந்து பத்தாம் தேதி வரை வருடாந்திர பவித்திர உற்சவம் நடைபெறும்.

ஒன்பதாம் தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவமும், 11-ஆம் தேதி ரக்‌ஷா பந்தன், சிரவண பவுர்ணமி, வைகானச மகாமுனி ஜெயந்தி ஆகியவை நடக்க இருக்கிறது.

தொடர்ந்து 12 ஆம் தேதியில் ஹயக்ரீவர் ஜெயந்தி மற்றும் உற்சவர் மலையப்ப சாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

பின், ஆகஸ்ட் 15 சுதந்திர தினமும், 19ஆம் தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 20-ல் உறியடி உற்சவம் நடக்கவுள்ளது. 

பின் 29-ல் பலராமன் ஜெயந்தி, 30ம் தேதி வராக ஜெயந்தி, 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி உள்ளிட்டவை கொண்டாடப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupathi temple function in auguest 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->