தினம் ஒரு திருத்தலம்.. பஞ்சமுக ஆஞ்சநேயர்.. 1008 லிங்கங்கள்.. சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தில் உள்ள கந்தாஸ்ரமம் என்னும் ஊரில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் தாம்பரம் என்னும் ஊர் உள்ளது. தாம்பரத்தில் இருந்து கந்தாஸ்ரமத்தில் உள்ள இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்குள்ள முருகன் 'சுவாமிநாத சுவாமி" என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார். வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாற்றிய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் பஞ்சலோகத்திலான பிரம்மாண்ட சுதர்சன மூர்த்தி கிழக்கு நோக்கியும், அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

பாணம் 8 அடி, 1 அங்குலமாக இக்கோயிலில் உள்ள சகஸ்ரலிங்கமானது அமைந்துள்ளது. அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் அமைந்துள்ளன. பிரம்மாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.

இதன் எதிரே 6 அடி உயர நந்தி அமைந்துள்ளது. அன்னதான மண்டபத்தில் அன்னபூரணி தனி பீடத்தில் அருளுகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவனின் அம்சமான தத்தாத்ரேயர் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

கோயிலின் வாயு மூலையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கிழக்கே வானர முகம், தெற்கே நரசிம்ம முகம், மேற்கே கருட முகம், வடக்கே வராஹ முகம், மேல் நோக்கி குதிரை முகம் ஆகியவை உள்ளன.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் சனிபகவான் அருளுகிறார். இக்கோயிலில் உள்ள சரபேஸ்வரரின் கையில் மான், மழு, சர்ப்பம் மற்றும் நெருப்பு ஆகியவை உள்ளன. சரபேஸ்வரருக்கு எதிரில் சிங்கமுகத்துடன் பிரத்யங்கிரா தேவி அருளுகிறாள்.

கோபுரங்கள் ஒரிசா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள பஞ்சலோகத்திலான பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை வேறு எங்கும் இல்லை.

கணபதியின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி ஐந்து முகம், பத்து கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் இக்கோயிலில் அருளுகிறார். இவரது சன்னதி கோஷ்டத்தில் பால கணபதி, லட்சுமி கணபதி ஆகியோரும் உள்ளனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

கந்தசஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, அனுமன் ஜெயந்தி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரபேஸ்வரரையும், ஞானம் மற்றும் செல்வம் பெருக மேற்கு பார்த்த முருகனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special swamynatha swamy temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->