ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.. இறகுகள் மூடிய நிலையில் கருடாழ்வார்.. அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில்.!
Today special Vaikundavasar temple mangadu
இந்த கோயில் எங்கு உள்ளது?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 66 கி.மீ தொலைவில் மாங்காடு என்னும் ஊர் உள்ளது. மாங்காட்டில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
சுவாமி நேரடியாக வைகுண்டத்தில் இருந்து வந்து, 'வைகுண்டவாசர்" என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை.
ஏகாதசியன்று சுவாமி வைகுண்டவாசர், கருட வாகனத்தில் வலம் வந்து காட்சியளிக்கிறார்.
வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம் வைத்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
இவருக்கு அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்தபடி காட்சியளிக்கிறார். திருமண சீராக அவர் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது.
பிரகாரத்தில் கனகவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
இத்தல ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் அழகாக காட்சியளிக்கிறார்.
வேறென்ன சிறப்பு?
இத்தல மூலவருக்கு எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது இறகுகள் மூடிய நிலையில் இருக்கிறது.
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவார பாலர்களாக இருப்பர். ஆனால் இங்கு அவிரட்சகன், அக்னி என்பவர்கள் துவார பாலகர்களாக காட்சி தருகின்றனர்.
மாமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக அமைந்துள்ளது.
திருக்கச்சிநம்பி, நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோரின் சிலைகளும் இத்தலத்தில் அழகாக காட்சியளிக்கின்றன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி, தை மாதம் தெப்பத்திருவிழா ஆகியவை இத்தலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
பணப்பிரச்சனை மற்றும் திருமணத்தடை ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special Vaikundavasar temple mangadu