ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மீது தாக்குதல் கஞ்சா போதையில் இருந்த 4 இளைஞர்கள் கைது..!
four youths arrested for attack passangers in railway station at chennai
சென்னையில் ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் நடைமேடையில் நேற்று மாலை ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர்.
அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த நான்கு இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றை வைத்துக்கொண்டு தரையில் தட்டியும், அங்கு இருக்கும் இரும்பு கம்பிகளை அடித்தும் சென்றனர்.
அதுமட்டுமல்லாமல், நடைமேடையில் ரெயிலுக்காக காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கினர். இதில், ஒருவர் காயமடைந்ததால், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆவடி ரெயில்வே போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் மூன்று பேரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
four youths arrested for attack passangers in railway station at chennai