நாளை திருவோண விரதம்... சீர் குலைந்த மனம் சீராக பெருமாளை வழிபாடுங்கள்.! - Seithipunal
Seithipunal


மனக்கவலைகளை போக்கி சந்தோஷமான வாழ்க்கையைத் தரும் திருவோண விரதம்:

திருவோண நோன்பு(விரதம்) என்பது, பெருமாளுக்கு உகந்தது. இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும்.

அதுமட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.

மாதந்தோறும் திருவோண நாளில் திருமாலை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனம் சீராகும்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும், இன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதால் கல்விச் செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று சுண்டலை பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

திருவோணம் நட்சத்திரமான நாளைய தினம் பெருமாளை காலையில் வழிபாடு செய்தால் நோய்கள் குணமாகும். நண்பகல் வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மாலை வழிபாடு செய்தால் பாவம் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow thiruvona Viratham perumak vazhipadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->