15 ஆண்டுகளாகியும் தன்மை மாறாத வரகு - திருச்செந்தூர் கோவிலில் அதிசயம்.!
varaku not change in thiruchanthur murugan temple kalasam at 15 years
தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் மகா கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றதையடுத்து 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் நேரடி மேற்பார்வையில் ராஜகோபுரத்தில் உள்ள 9 கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்களை மாற்றுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கோபுரத்திலிருந்த கலசங்கள் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டது. அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த தானியமான வரகை எடுத்து பார்க்கும் போது 15 ஆண்டுகள் ஆகியும், அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்துள்ளது. இதைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
English Summary
varaku not change in thiruchanthur murugan temple kalasam at 15 years