ஐந்து ரூபாய் நாணயம் இருக்கா? வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இப்படி வழிபாடு செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


வெள்ளிக்கிழமை ஐந்து ரூபாய் நாணய வழிபாடு:

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க செய்ய தினந்தோறும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. நாம் கடைபிடிக்கும் சிறு சிறு விஷயங்களிலும் கூட மகாலட்சுமியை எளிதாக வீட்டிற்கு அழைத்து வந்து விடலாம்.

வீட்டில் இருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில் மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை. எனவே இந்த பரிகாரத்தை நாளை செய்யலாம்.

வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை இதை தவறாமல் செய்தால் பணப்பிரச்சனை  ஓடிவிடும்.! - Seithipunal

வழிபடும் முறை :

பணம் என்பது நிலையான பொருள் அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடம் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயமாகும். இதுபோன்ற தருணங்களில் நம்மிடம் மகாலட்சுமி எப்பொழுதும் இருப்பாள் என்று கூறி விட முடியாது.

எந்தவொரு வீட்டில் காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் ஒலிக்கிறதோ, அந்த வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் தான் கோவில்களில் முதல் பாடலாக சுப்ரபாதம் போடப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று காலை, மாலை என இருவேளையும் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். காலையில் செய்யப்படும் பூஜையில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

அதாவது ஐந்து வெற்றிலைகள், ஐந்து கொட்டை பாக்கு மற்றும் ஒரு ஐந்து ரூபாய் நாணயமும் வைத்து கொள்ள வேண்டும். பூஜைக்கு தேவையான ஐந்து ரூபாய் நாணயங்களை முன்கூட்டியே நாம் சேகரித்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம்  செய்யுங்கள்...! - Seithipunal

காலை பூஜையறையில் வழிபாடு செய்யும் பொழுது ஒரு சிறிய தாம்பூல தட்டில் எடுத்து வைத்துள்ள ஐந்து வெற்றிலைகளை காம்பு நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே பரிகாரம் செய்பவர்கள் காம்பை நீக்கி விடுவது மிகவும் நல்லது. வெற்றிலையின் மேல் எடுத்து வைத்துள்ள ஐந்து கொட்டை பாக்குகளை வைக்க வேண்டும். அதற்கு தட்சணையாக ஐந்து ரூபாய் நாணயத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

பிறகு பூஜையறையில் உள்ள சுவாமி படத்திற்கு தூப, தீப ஆராதனையை காண்பிக்க வேண்டும். இதே போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும். முதல் வெள்ளிக்கிழமையில் செய்தவற்றை அடுத்த வெள்ளிக்கிழமையில் செய்யும் பொழுது புதிதாக மாற்றி விட்டு, பழைய ஐந்து ரூபாய் நாணயத்தை அப்படியே கொண்டு போய் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்து வர மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

வெற்றிலை, பாக்கு என்பது தாம்பூலம் கொடுக்க பயன்படுத்தும் பொருட்களாகும். இப்பொருட்களை மங்கல பொருட்கள் என ஆன்மிக சாஸ்திரமும் எடுத்துரைக்கிறது. கலைகளை கற்கும் பொழுது குருவிற்கு தட்சணை கொடுப்பது போல, நம் வாழ்வு வளமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இறைவனிடத்தில் தட்சணை கொடுப்பது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellikizhamai 5 rupees valipadu in morning


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->