சோமவார பிரதோஷத்தன்று சிவபெருமானை வணங்கினால் இத்தனை நன்மைகளா? - Seithipunal
Seithipunal


ஆனி மாத சோமவார பிரதோஷம்...!!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம் ஆகும்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனை குறிக்கும். சந்திரனை பிறையாக்கி தன் சிரசிலேயே அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

மனக்குழப்பத்துடன், மனோபலம் இல்லாமல், மனத்தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை. சோமவார பிரதோஷம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.

மற்ற பிரதோஷ நாட்களை விட சனி பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஆகையால் அன்று முழுவதும் விரதமிருந்து சிவபெருமானை வழிபடவும். விரதமிருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதமிருக்கலாம்.

 மாலை அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, பிரதோஷ காலத்தில் நடக்கும் பூஜையில் நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி நந்தியம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், தீவினை விலகும்.

பலன்கள் :

ஆனி பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

ஆனி பிரதோஷத்தில் சிவனை வழிபடுவதால் சூரிய கிரக தோஷங்கள் நீங்குகிறது. கண்பார்வை குறைபாடுகளை தீர்க்கிறது.

மேலும் பிரதோஷ காலத்தில் பசுவின் பாலை கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனை கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும்.

 வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். எனவே, பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.

இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை போன்றவை விலகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worshiping Lord Shiva on Somavara Pradosha is so beneficial


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->