2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இல்லையா? கே.எல்.ராகுலுக்கு முன்னுரிமை என பங்காரின் கருத்து
2025 Champions Trophy No Rishabh Pant as India wicketkeeper Bangar opinion that KL Rahul is a priority
பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையில் காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக முக்கிய பங்காற்றினார். எனினும், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்துள்ளார். இதனால், சாம்பியன்ஸ் ட்ராபியில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் தான் சிறந்த தேர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.
2023 உலகக்கோப்பையில் ராகுல் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தியது அவருக்கான முன்னுரிமையை உறுதிப்படுத்தியதாக பங்கார் தெரிவித்துள்ளார். மேலும், பந்த் நீண்டகாலமாக ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இல்லை என்பதும் பங்காரின் கருத்தின் பின்புலமாக உள்ளது.
இதே நிகழ்ச்சியில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், டி20 கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பராக தேர்வுக்கு தகுதியானவர் என்று கூறினார். "கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறமை கொண்ட சஞ்சு சாம்சன், இந்திய அணிக்கு தேவைப்படும் நெருக்கமான சூழலில் சிறந்த தேர்வாக இருப்பார்," என்றார் மஞ்ரேக்கர்.
அதே நேரத்தில், பங்கார் தனது கருத்தை மேலும் விரிவுபடுத்தியபோது, "நான்கு மற்றும் ஐந்து என்ற இடங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் எனது முதலுரிமை வீரர்கள். உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் ட்ராபி அணிக்கான இறுதி தேர்வு குறித்து ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்திருக்கிறது. பந்த், ராகுல், சாம்சன் என பல தேர்வுகள் இருப்பதனால், அணியின் திட்டமிடல்தான் மிக முக்கியம்.
English Summary
2025 Champions Trophy No Rishabh Pant as India wicketkeeper Bangar opinion that KL Rahul is a priority