ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்று, மொத்தம் 323 டாட் பந்துகள்..1,61,500 மரக்கன்று நடப்போகும் பிசிசிஐ!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் டே ஆப் சுற்று போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்த நிலையில்,1,61,500 மரக்கன்றுகள் நடைபெற உள்ளது.

17வது நடப்பு ஐபிஎல் சீசன் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. பத்து அணிகள் கலந்து கொண்ட ஐபிஎல் தொடரில், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதில் பெங்களூரு அணி தொடர் 6 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆப்க்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

 முதல் தகுதி சுற்றில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் மோதியது. அதில் கொல்கத்தா நீ வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. பின்னர் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதியது. அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதி சுற்றி ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. அதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில், தகுதிச்சுற்று, எலிமினேட்டர், இறுதிப்போட்டி என மொத்தம் 323 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் 1,61,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

மரக்கன்றுகளை நடப்படும் பணியில் பிசிசிஐ மற்றும் டாடா குழுமம் தொடங்கியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் வீசப்பட்ட 294 டாட் பந்துகளுக்கு 1,47,000 மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

500 saplings per dot ball total 323 dot balls 161500 saplings to be planted by BCCI


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->