அபிஷேக் ஷர்மாவின் ருத்ரதாண்டவம்; பஞ்சாப்பை வீழ்த்தி 02-வது வெற்றியை பெற்ற ஹைதராபாத்..!
Abhishek Sharma action packed performance helped Hyderabad defeat Punjab and win its 02nd victory
ஐ.பி.எல். தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் தேர்வுசெய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணி சார்ப்பாக, பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடி காட்ட, மறுமுனையில், பிரம்சிம்ரன் சிங் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நேஹல் வதேரா 27 ரன்களிலும், ஷசாங்க் சிங் 02 ரன்களிலும், மேக்ஸ்வெல் 03 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் வெறும் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (34 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். குறிப்பாக முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் 20-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 04 சிக்சர்கள் அடித்து அதிரடி காட்டினார்.
முடிவில் 20 ஓவர்களில் பஞ்சாப் 06 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்து, இமாலய இலக்கை கொடுத்தது. ஐதராபாத் அணி சர்ப்பாங்க அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 04 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 246 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமியங்கிய ஐதராபாத் அணி ஆரம்பமே அதிரடி காட்டியது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்நிலையில், ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 141 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் இஷான் கிஷன் 9 (6) ரன்களும், கிளாசன் 21 (14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில 02 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 08 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அனி அபார வெற்றிபெற்றது. இதன்படி ஐதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில், 04 புள்ளிகளுடன் 02-வது வெற்றியை பதிவு செய்தது. புள்ளி பட்டியலில் 08-வது இடத்தை பிடித்துள்ளது.
English Summary
Abhishek Sharma action packed performance helped Hyderabad defeat Punjab and win its 02nd victory