பாசில் ஜோசப்பின் 'மரண மாஸ்' திரைப்படத்திற்கு சவுதி அரேபியா மற்றும் குவைதில் தடை..? காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் முன்னேறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன..

இந்நிலையில், இவர் 'மரணமாஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பாசில் ஜோசப் வித்தியாசமான பன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை சிவபிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். டோவினோ தாமஸ், ரபியல் பிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு எலக்ட்ரானிக் கிளி என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கு சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் திரையிட அந்நாட்டு தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. ஏனெனில் இந்த படத்தில் திருநங்கை ஒருவர் நடித்துள்ளதால்  படத்தை வெளியிட வேண்டுமென்றால் திருநங்கை இடம்பெறும் காட்சியை நீக்க வேண்டும் என அந்நாட்டு சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Basil Joseph film Marana Mass has been banned in Saudi Arabia and Kuwait


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->