கீர்த்தி சுரேஷின் அடுத்த பாலிவூட் திரைப்படத்தின் கதாநாயகன்..?
Keerthy Suresh next Bollywood film next hero
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக 'ரகு தாத்தா' படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் 'பேபி ஜான்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் 'அக்கா' என்ற ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ், விஜய்தேவரகொண்டா மற்றும் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உள்ளிட்டோருக்கு ஜோடியாக உள்ளதாக கூறப்பட்டது.
அத்துடன், கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த பாலிவுட் திரைப்படத்தில் ராஜ் குமார் ராவுக்கு ஜோடியாக சேர இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Keerthy Suresh next Bollywood film next hero