மரத்துக்கு மரம் தாவி அருள்வாக்கு - கோவில் திருவிழாவில் நேர்ந்த வினோதம்.!!
devotees jump trees in vellore temple festival
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகே பெரிய ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
பக்தர்கள் முத்துகுமரன் மலையில் இருந்து பால் குடங்களை சுமந்தபடி கோவிலுக்கு வந்தனர். அப்போது சாமியாடிய நபர் ஒருவர் மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார்.
காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர். கோவிலை வந்தடைந்ததும் பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதேபோன்று, குழந்தை வரம், திருமண பாக்கியம் வேண்டி ஏராளமானோர் விரதமிருந்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மோர் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
English Summary
devotees jump trees in vellore temple festival