நிரம்பிவரும் அமராவதி: கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Amaravathi dam over Flood warn
கனமழை காரணமாக அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில், கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பற்றிருப்பதாவது, "திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/amaravathi jhsd.jpg)
அணைக்கு வினாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே, அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: நொய்யல் ஆறு வெள்ளப்பெருக்கு:
கோவை: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் ஆறு மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்றும், கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/cvbsdfgesrth.jfif)
கோவை சிறுவாணி சித்திரைசாவடி அணை வெள்ளப்பெருக்கு:
கோவை சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Amaravathi dam over Flood warn