அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற ஜன்னிக் சின்னெர்! - Seithipunal
Seithipunal


நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், இத்தாலி நாட்டை சேர்ந்த ஜன்னிக் சின்னெர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார். 

அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பல்வேறு சுற்றுகளிலும் வெற்றியை நிலைநாட்டி வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த வீரர் ஜன்னிக் சின்னெர், அமெரிக்க நாட்டை சேர்ந்த டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

ஜன்னிக் சின்னெருக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American open tennis jannik sinner who knocked out the champion title


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->