டி20 உலகக்கோப்பை! வீட்டுக்கு சென்ற ஆஸ்திரேலியா! ஓய்வை அறிவித்த வார்னர்!
Australia batsman Warner announced his retirement
டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் நடைபெற்று வருகிறது. அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் தோல்வி பெற்றதால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா ? செல்லதா ? என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் ஆஸ்திரேலியா அணிக்காக 18,995 ஆண்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் வார்னர் இடம் பெற்றிருந்தார். சர்வதேச போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Australia batsman Warner announced his retirement