மழையால் தப்பிய ஆஸ்திரேலிய அணி.!! ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்க வைத்தது!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்ஸ்டர் நகரில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 592 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 317 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. 

இதனால் ஆஸ்திரேலியா அணி தனது மூன்றாவது இன்னிசை தொடங்கிய நிலையில் நேற்றைய 4வது நாள் ஆட்டம் முடிவில் 214 ரன்கள் 5 விக்கெட் இழந்து இங்கிலாந்து அணியை விட 61 ரன்கள் பின் தங்கிய நிலையில் தடுமாறியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிச்சல் மார்ஸ் 31 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் தாமதமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் 5வது நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டதால் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக 5வது நாள் ஆட்டத்தில் இருந்து தப்பிய ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும் தொடர் சமணில் முடியும் என்பதால் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia retain the Ashes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->