டி20 உலக கோப்பை : ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரான மேத்யூ வேட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில் தற்போது மெல்போர்ன் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தடைபட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டி மழை காரணமாக தடைப்பட்டால் அரையிறுதிக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கலாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் விக்கட் கீப்பர் மேத்யூ வீட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது என்பதால் கொரோனா தொற்றுடன் களமிறங்குவார் என கூறப்படுகிறது.

ஒருவேளை அவரால் விளையாட முடியாமல் போனால் டேவிட் வார்னர் அல்லது மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் என கூறப்படுகிறது. நேற்று மேக்ஸ்வெல் சிறுது நேரம் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia wicket keeper Mathew Wade affected covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->