இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் முதல் டி20 போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.!
Australia women's beat by india womens by 9 wickets
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 அவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 36 ரன்களும், தீப்தி ஷர்மா 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 18.1 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது.
English Summary
Australia women's beat by india womens by 9 wickets