இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் 2வது டி20 போட்டி.. இந்திய அணிக்கு 188 ரன்கள் இலக்கு.. வெற்றி யாருக்கு?
Australia women's target of 188 runs against India womens
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் விளையாடிய பெத் மூனே 84 ரன்களுடனும், தஹிலா மெக்ராத் 70 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
English Summary
Australia women's target of 188 runs against India womens