தமிழ் முறைப்படி தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர். விரைவில் பெற்றோர் ஆக உள்ள இந்த தம்பதிக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

34 வயதான மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது காதலியை கரம் பிடித்தார். 207ம் ஆண்டு முதல் காதலித்து, டேட்டிங் செய்து வந்த இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். தற்போது வினி ராமன், கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

வினி ராமன், பிறந்தது மற்றும் வளர்ந்தது ஆஸ்திரேலிய நாட்டில் தான். ஆனால் அவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு புலம் பெயர்ந்தவர்கள். 2017 முதல் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வினி ராமன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

australian cricketer glenn maxwell wife vini raman celebrates her bangle ceremony in tamil traditional way


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->