பாகிஸ்தான் தொடரால்.. ஐபிஎல் போட்டிகளை மிஸ் பண்ணும் ஆஸ்திரேலிய வீரர்கள்.!
Australian players miss start of ipl matches
பாகிஸ்தான் தொடரால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர்.
இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பிப்.12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 590 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
இந்தநிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் தொடக்கப் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது
English Summary
Australian players miss start of ipl matches