காமன்வெல்த் விளையாட்டு போட்டி : மகளிர் டி20 கிரிக்கெட்.. இந்தியா-ஆஸ்திரேலியா இன்று முதல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. 

இந்நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி ஆரம்பமாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Common wealth games india vs australia T20 Cricket


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->