மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது -  சாம்பியன் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


சீனாவில் உள்ள ஹூலுன்பியர் நகரில் 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தது. 6 அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், இந்தியா, தென் கொரியா, சீனா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

தொடர்ந்து இந்த போட்டியில்  இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி,  5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.பின்னர் மற்றொரு அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின.  இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50 நிமிடங்களில் கோல் அடித்தார். இதன் மூலம்  இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

சீனா கடுமமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர் இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 


இந்நிலையில், ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Courage and Dedication Make Nation Proud PM Modi Congratulates Indian Hockey Team for Champion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->