" கடினமாக நாள் இன்று "ஓய்வை அறிவித்தபின் தினேஷ் கார்த்திக் பேச்சு!!
Cricketer Dinesh Karthik retirement announced
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பருமான தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் எலிமினேட்டர் சுற்று நேற்று நடைபெற்றது. பாஸ் வேண்டா ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழந்து 172 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் கலந்திடையே ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6விக்கெட்களை இழந்து 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்று குவாலிபயர் 2 க்கு முன்னேறியது.
பெங்களூர் அணியில் நட்சத்திர வீரராகத்தைக் கண்ட தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வரலாற்றில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். 4842 ரன்களை எடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தருவிய பின் ஐ பி எல் லிருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் பேசுகையில், ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற போது மிகவும் சந்தோஷப்பட்டோம். இந்த வருடம் எங்களுக்கானது என் நினைத்தோம். விளையாட்டை பொருத்தவரை எல்லா போட்டிகளும் சந்தோசமான முடிவுகளை கொடுக்காது. சில கடினமான நாட்களும் இருக்கும். இன்று எங்களின் கடினமான நாள் என்று கூறினார்.
English Summary
Cricketer Dinesh Karthik retirement announced