ஒடிசா ரயில் விபத்து || கருப்பு பட்டையுடன் களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதங்களுக்காக அணிவகுத்து நிற்கும்போது சமீபத்தில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக இரு அணி வீரர்களும் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணி வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி முடியும் வரை ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இரு அணி வீரர்களும் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cricketers with black armband odisha train accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->