அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டாரா? அணி நிர்வாகம் வெளியிட்ட தகவல்.!
CSK CEO Kasi viswanathan speech about dhoni injury update
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இதில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சிசான்டா மகாலா ஆகியோர் காயமடைந்தனர்.
இதில் சிசான்டா மகலா அடுத்த 2 வாரத்திற்கு விளையாட மாட்டார் எனவும் தோனி ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோணி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பதிலளித்தார். அவர் பேசியதாவது, கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் இருப்பது உண்மைதான். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும், பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய அவர், வேகமாக குணமடைந்து வருவதாகவும் ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக விளையாடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
CSK CEO Kasi viswanathan speech about dhoni injury update