ரோகித் சர்மாவை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய முக்கிய வீரர்.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 4 டி-20 போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் நேற்று முன் தினம் நடந்த பயிற்சியின் போது ரோஹித்தின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், மனைவிக்கு புத்தாண்டு துவக்கத்தில் முதல் குழந்தை பிறக்க உள்ளது. இதற்கான கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து குயின்டன் டி காக் வெளியேறினால், மீண்டும் அணியில் இணைவதில் சிக்கல் ஏற்படும். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டு உள்ளார். அவருக்கு பதிலாக வெரேன், ரியான் ரிக்கிள்டன் என இருவரில் ஒருவர் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கவுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

de gock withdraws from test match against india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->