கோவத்தில் டிவியை உடைத்த தோனி! ஹர்பஜன் கூறிய தகவல்!சிஎஸ்கே பதிலடி! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் உலகில் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒருவராக இருக்கும் எம்.எஸ். தோனி, 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய அற்புதமான கேப்டன் திறமைகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்தார். இருப்பினும், 42 வயதை அடைந்த பிறகு, கடந்த ஆண்டில் அவர் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகி, சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடினார்.

2024 ஐபிஎல் தொடரில், CSK ருதுராஜ் தலைமையில் தடுமாற்றத்துடன் விளையாடியது. லீக் சுற்றில் ஆர்சிபி  அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது, இதனால் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டது.

ஏற்கனவே தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி அறிவித்திருந்தார். இந்த சூழலில், CSK அணி தனது முன்னாள் கேப்டனை வெற்றியுடன் வழியனுப்பியிருக்கக் கூடாதா என்பதில் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.

தோனி கூல் கேப்டனாக அறியப்பட்டாலும், 2024 ஐபிஎல் தோல்விக்குப் பிறகு கோபத்தில் அவர் பெவிலியனுக்கு திரும்பி, உடைமாற்ற அறையில் தொலைக்காட்சியை உடைத்ததாகக் கூறியிருந்தார் இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்த செய்தி வைரலானது.

இதற்குப் பதிலளித்த CSK உடற்பயிற்சியாளர் டாமி சிம்செக், இந்த செய்தி முற்றிலும் போலியானது என்றும் தோனி எதையும் உடைக்கவில்லை என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். "போட்டிக்குப் பிறகு அவர் கோபமாக இருந்தது என நான் எப்போதும் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார். 

2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் பிளேயர் விதி மீண்டும் அறிமுகமாக உள்ளது. இதை பயன்படுத்தி, தோனி மீண்டும் CSK அணியில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhoni broke the TV in Govt Information given by Harbhajan CSK retaliates


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->