புதிய சிக்கலில் போரிஸ் ஜான்சன்.. மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்டியின் துணை கொறடாவாக எம்பி கிறிஸ் பின்ஷர் உள்ளார். கடந்த புதன்கிழமை கிறிஸ் பின்ஷர் இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக  செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது எடுத்து கிறிஸ் பின்ஷர் கட்சியின் துணைக் கொறடா பதிவிலிருந்து ராஜினாமா செய்தார். அதை அடுத்து பழமைவாத கட்சி எம்பி பதவியில் இருந்து கிறிஸ் பின்ஷர் இடைநீக்கம் செய்யப்பட்டார். நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்தது. 

இதையடுத்து, இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இருவரும் தங்கள் பதிவை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன்  அரசு மீது நம்பிக்கை இழந்ததால் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் துறை அமைச்சர் குயின்ஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் லாரா டிராட் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england children families minister and law minister resign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->